பர்வத யோகம்

  லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.

0 Comments

பாபகத்ரி யோகம்

  லக்னமோ அல்லது சந்திரனோ இரு பாவ கிரகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்க பாப கத்ரி யோகம் உண்டாகிறது. பலன் செல்வந்தராயினும் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சந்திப்பார்கள்.

0 Comments

திரிலோசனா யோகம்

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது. பலன் எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.

0 Comments

அந்திய வயது யோகம்

  1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது. பலன் இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.  

0 Comments

தரித்திர யோகம்

  9 ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது. பலன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகின்றது.

0 Comments

கலாநிதி யோகம்

குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது. பலன் அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.

0 Comments

வரிஷ்ட யோகம்

ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. பலன் நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.

0 Comments

லட்சுமி யோகம்

9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.

0 Comments

பூமி பாக்கிய யோகம்

4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும். பலன் வீடு, நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும்.  

0 Comments

ராஜ யோகம்

  9 ஆம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் ராஜ யோகம் உண்டாகிறது. பலன் வீடு, வாகனம், செல்வம், செல்வாக்கு, யாவும் குறைவில்லாமல் அமைகிறது.  

0 Comments
×
×

Cart