ராஜயோகம்
1,4,7,1௦ ஆகிய வீட்டுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது. பலன் நல்ல மனைவி, வீடு யோகம், தொழில் யோகம், செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.
1,4,7,1௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது. பலன் நல்ல இல்வாழ்வு புத்திர பாக்கியம் அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.
12 ம் அதிபதி 12ல் இருபது விமலா யோகம். பலன் தொண்டு செய்யும் எண்ணம் உடையவர். சுதந்திர பிரியர்.
2 ஆம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் பெற்றிருப்பது அன்னதான யோகமாகும். பலன் பலருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அன்னதானம் செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.
7 கிரகங்கள் 4 ராசிகளில் இருப்பது கேதரா யோகம் ஆகும். பலன் சிறந்த விவசாயிகளாகவும் அனைவர்க்கும் உதவி செய்யும் மனமுடயவராகவும் உள்ளனர்.
7 கிரகங்கள் 7 ராசிகளில் இருபது வீனா யோகம் ஆகும். பலன் வாழ்கையில் வசதி வாய்ப்பு அடைகிறார்கள். சமுதாயத்தில் தலைவராக இருப்பார்கள. அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்.
லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும். பலன் மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும்.
லக்னாதிபதி பலம் இழந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தாலும் 6, 8, 12 க்குகுரியவர் லக்னத்தில் அமர்ந்திருந்தாலும் ரோககிரகஸ்தா யோகமாகும். பலன் மெலிந்த தேகம் உடையவர்,
சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும். பலன் அன்றாட வாழ்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறின் சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப் பெறுகின்றார்கள்.
பெண் சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் பிறந்து ஆயில்யம், சதயம், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பின் விஷ கன்னிகா யோகம் உடையவள் ஆவாள். பலன் இத்தகைய பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணின் உடல் நலம் பாதிக்கபடும். பெண்ணின் ஜாதகத்தில் 2, 8…