அசுர யோகம்

லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது. பலன் அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.

0 Comments

சரள யோகம்

8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும். பலன் நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர்.

0 Comments

அங்கஹீன யோகம்

12 ஆம் அதிபதி கேந்திர திரிகோணம் பெற்று ராகுவுடன் சம்பந்தம் பெறுவது. பலன் உடலில் ஏதாவது ஓர் உறுப்பில் குறை இருக்கும்.  

0 Comments

பாக்கிய யோகம்

லக்னத்திற்கு 1௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும். பலன் அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர்.  

0 Comments

உபஜய யோகம்

  உபஜய ஸ்தனங்களான 3,6,10,11 ஆகிய இடங்களில் குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருக்குமாயின் உபஜனயோகமாகும். பலன் வசதி நிறைந்து வாழ்வார். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் பெறுவார்.

0 Comments

சாங்கியா யோகம்

லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சாங்கியா யோகம் உண்டாகிறது. பலன் உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று வசதியாக வாழ்வார்.

0 Comments

ராஜயோகம்

1,4,7,1௦ ஆகிய வீட்டுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது. பலன் நல்ல மனைவி, வீடு யோகம், தொழில் யோகம், செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.

0 Comments

சதுஸ்ர யோகம்

  1,4,7,1௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது. பலன் நல்ல இல்வாழ்வு புத்திர பாக்கியம் அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.

0 Comments
×
×

Cart