திரிலோசனா யோகம்

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது. பலன் எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.

0 Comments

அந்திய வயது யோகம்

  1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது. பலன் இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.  

0 Comments

தரித்திர யோகம்

  9 ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது. பலன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகின்றது.

0 Comments

கலாநிதி யோகம்

குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது. பலன் அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.

0 Comments

வரிஷ்ட யோகம்

ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. பலன் நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.

0 Comments

லட்சுமி யோகம்

9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.

0 Comments

பூமி பாக்கிய யோகம்

4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும். பலன் வீடு, நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும்.  

0 Comments

ராஜ யோகம்

  9 ஆம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் ராஜ யோகம் உண்டாகிறது. பலன் வீடு, வாகனம், செல்வம், செல்வாக்கு, யாவும் குறைவில்லாமல் அமைகிறது.  

0 Comments

சங்க யோகம்

  5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது. பலன் உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.

0 Comments

சரஸ்வதி யோகம்

  குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை…

0 Comments
×
×

Cart