பெயர் எண் 100
பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு…
பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு…
லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது. பலன் பிற்கால வாழ்கையில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர்.
லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள்.
லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது. பலன் அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.
8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும். பலன் நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர்.
லக்னதிபதியும் 1௦ ஆம் அதிபதியும் சம்பந்தம் பெறுவது (பார்வை அல்லது சேர்கை) பலன் தனது முயற்சியால் உயர்நிலை அடைவார்.
12 ஆம் அதிபதி கேந்திர திரிகோணம் பெற்று ராகுவுடன் சம்பந்தம் பெறுவது. பலன் உடலில் ஏதாவது ஓர் உறுப்பில் குறை இருக்கும்.
லக்னத்திற்கு 1௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும். பலன் அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர்.
உபஜய ஸ்தனங்களான 3,6,10,11 ஆகிய இடங்களில் குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருக்குமாயின் உபஜனயோகமாகும். பலன் வசதி நிறைந்து வாழ்வார். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் பெறுவார்.
லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சாங்கியா யோகம் உண்டாகிறது. பலன் உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று வசதியாக வாழ்வார்.