வசுமதி யோகம்
3, 6, 11 க்கு உடையவர்கள் பலம் பெற்று காணப்படின் வசுமதி யோகம் உண்டாகின்றது. பலன் செல்வம், செல்வாக்கு, நீண்ட புகழ் யாவும் உண்டாகிறது.
3, 6, 11 க்கு உடையவர்கள் பலம் பெற்று காணப்படின் வசுமதி யோகம் உண்டாகின்றது. பலன் செல்வம், செல்வாக்கு, நீண்ட புகழ் யாவும் உண்டாகிறது.
லக்னாதிபதி, சனி, குரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது. பலன் வல்லமை, வலிமை, நீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.
சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள்.
லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.
ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது. பலன் மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள். பலன் இறந்த பிறகு மீண்டும் பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படுகின்றது. பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.
லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.
ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது. பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.
சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மாளவிய யோகம் உண்டாகிறது. இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. பலன் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், நிலைத்த புகழ், வசதியான வாழ்கை அசையா…