அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to- 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும்.
எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to- 6.15 A.M (கோதூளி முகூர்த்தம்), உச்சி காலம் 11.45 A.M to- 12.15 P.M (அபிஜித் முகூர்த்தம்), அஸ்தமான காலம் 5.45 P.M to- 6.15 P.M (கோதூளி முகூர்த்தம்), ஆகிய மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும்.
இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோசம் கிடையாது. சூரிய உதய அஸ்தமன நேர பேதத்தை கணக்கில் கொள்ளவும்.
நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமும் வந்தால் அதிக பலன் தரும்.
பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலமான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும்.
அந்த முகூர்த்தமானது எல்லா நாடுகளிலும் முக்கியமானது.எத்தனை அவகுணதோஷங்கள் இலக்கினத்திற்கு இருந்தாலும், அவற்றையும், திதிராதி
தோஷங்களையும், நவகிரக தோஷங்களையும், போக்கி வெற்றியைத் தரும் இந்த அபிஜித்முகூர்த்தம் ஆகும். ஆனால், இந்த வேளையில் முடிவெட்டுதல், ஷேவிங், உபநயனம் (பூணூல் கல்யாணம்) ஆகியவற்றை மட்டும் பெறக்கூடாது!