- சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
- பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
- மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்
- ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
- வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
- வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
- அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
- யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது
- வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
- தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
- பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்
- கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்
- குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.