82 என்ற எண் யாருடைய பெயர் எண்ணாக அமைகிறதோ, அவர்கள் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில் வாணிகம் போன்றவற்றின் தொடர்புடையவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்க வேண்டிய அம்சத்தைப் பெற்றவர்களாவார்கள். பெரிய சக்கரவர்த்திகளைப் போல் வாழக்கூடிய அம்சம் இவர்களுக்கு உண்டு என்றால் இது பற்றி விளக்க வேண்டுமா? இவர்கள் எதிர்பாராத பழிபாவங்களில் சிக்கி சங்கடப்படக்கூடும். குறிப்பாக காதல் விவகாரம் தொடர்பாக பலவித சிக்கல் ‘களுக்கு இலக்காக வேண்டியிருக்கும். அரசாங்கத்தின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டிய நிலையும் தோன்றலாம். அரசாங்க தண்டனையும் எதிர்நோக்க வேண்டி யிருக்கும். இவையெல்லாம் விதிவசத்தால் நோக்கக் கூடியவை. சற்று மதியுடன், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் இவைகளிலிருந்து விடுபட்டுவிடலாம்.