பெயர் எண் 73 ஆக உங்கள் பெயர் அமையுமானால் பரம்பரையாக வரும் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். பிறப்பிலிருந்தே சுகமான சூழ் நிலையில் வளருவீர்கள். நல்ல கல்வித் தகுதியிருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்குத் தேடுவதில் அக்கறை காட்டுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வது உங்கள் அடிப்படை நோக்கமாக இருக்கும். வீடு, வாசல், வாகனங்கள், தோட்டம், துரவு என்று சொத்துகள் அமையும். வாழ்நாள் முழுவதும் கவலையற்ற மகிழ்ச்சி கரமான வாழ்வே உங்களுக்கு அமைந்திருக்கும்.