பெயர்  எண் 37

உங்களின் பெயர்  எண் 37 ஆக வந்தமைவது மிகவும் சிறப்பான பலனைத் உங்களுக்கு தோற்றுவிக்கும். செல்வச் செழிப்பில் நீங்கள் திளைக்காவிட்டாலும் தொடக்க காலத்திலிருந்து வாழ்வின் இறுதிக்காலம் வரை தாராள மான பணப்புழக்கம் இருக்கும். செய்யும் முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து அதிக சிரமமில்லாமல் வெற்றியை ஈட்டித்தரும். சமுதாயத்தில் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். தலைவர், எம்.எல். ஏ, எம். பி, மந்திரி போன்ற அந்தஸ்து இவர்கள் வலிய வந்து அடையும். இந்த எண்ணில் பிறந்த நீங்கள்  ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் வாழ்க்கையில் பெருமளவில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உங்களுக்கு  அடிக்கடி பல நன்மைகளை அடைவீர்கள். தொழில், வாணிகம், போன்ற துறைகளில் ஈடுபட நீங்கள் முயற்சியெடுக்கும்போது பெருமளவில் மூலதனம் போடும் நண்பர்கள் தானாகவே வந்து பங்குதாரர்  ஆவார்கள். திரைப்படத்துறை,இசைக் கலை போன்ற கலைத்துறைகளில் எந்த வகையில் தொடர்பு வைத்திருந்தாலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பான ஓரிடத்தைத் துரிதமாக பெறுவீர்கள் எண் 46,55,64-ஆம் எண் 37-ஐப் போலவே நற்பலன் தரும் எண்களாகும். இவைகள் பெருமளவில் ஒத்த பலன் தருபவை.

×
×

Cart