பெயர் எண் 28

28 என்ற எண்ணைப் பெயர் எண்ணாக பெற்ற அன்பர்களே நீங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பாக முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம்போல தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணை தொட்டால் பொன்னாகும். எந்த வித திட்டமான முயற்சியில்லாவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் பணம் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திடீரென பெருஞ்சரிவுக்கு இலக்காக நேரிடும். தோல்வி மேல் தோல்வி ஏற்படும். செல்வச் செழிப்பு காரணமில்லாமல் குறையத் தொடங்கும். எதைச் செய்தாலும் நஷ்டத்தில் முடியும். 28 என்ற எண்ணின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நீங்கள்  மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கை நடத்த முற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படக்கூடிய துரதிருஷ்ட நிலையினைச் சமாளித்து ஒரு நிலையான வாழ்க்கை அமைப்பை பெற்றுவிட முடியும். வாழ்க்கையில் வசதிகள் குவியும்போது நீங்கள் அதைப் பேணிக் காத்து பத்திரப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாழ்க்கை முழுவதும் செல்வத்திலேயே திளைப்போம் என்ற அலட்சிய மனோபாவத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. பொருளாதார நிலையில்ஒரு சரிவு தோன்றும் போது நீங்கள்  தொழில், வாணிகம் போன்ற விஷயங் களில் அகலக் கால் வைக்கக் கூடாது குதிரைப்பந்தயம் கவனத்தை போன்ற போட்டிப்பந்தயங்களை விட்டு முழு அளவில் திருப்பிவிட வேண்டும். 28 ஒரு துரதிருஷ்ட மயமான எண் என கூறுவார்கள். சற்று விழிப்புடன் செயல்பட்டால் இதையே அதிர்ஷ்ட எண்ணாக நிலைப் படுத்திவிட முடியும்.

×
×

Cart