பெயர் எண் 19

உங்களுடைய பெயர் எண் 19 என்று அமையுமானால் உயரமான சிகரத்தை மலைச் நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் போல உங்கள்  வாழ்க்கையின் முன்னேற்றம் அமையும். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழ்நிலை உங்களுக்கு அமைந் திருக்கும். சிலர் கடுமையான வறுமை சூழ்நிலையில் திண்டாடுவதும் உண்டு. ஆனால் சிறுகச் சிறுக உழைத்து, திட்டத்துடன் பாடுபட்டு, படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே செல்விர்கள்.

மிகவும் வறுமைச் சூழ்நிலையில் பிறந்து உழைப்பாலேயே உயர்ந்த மேதைகள் பலரைப் பற்றிய வரலாறுகளைப் படித்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்களுடைய பெயர் களின் எண்ணிக்கை அனேகமாக 19 ஆகத்தான் இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைப்பது உங்கள்  உடலோடு ஒட்டிய பழக்கமாக இருக்கும். தளர்ந்த முதுமைக் காலத்திலும் நீங்கள் தளர்ச்சியைப்பற்றிய சிந்தனையேயின்றி கடினமாக உழைப்பீர்கள்.

×
×

Cart