உங்கள் பெயருடைய எழுத்துக்களின் கூட்டு எண் 10 என அமைந்தால் உங்கள் வாழ்க்கை அதிருஷ்ட வாழ்க்கையாக ஆனால் அதிர்ஷ்ட நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவீர்கள் . சிலகாலம் கடந்ததும் அந்த நிலையிலிருந்து சறுக்கி விழ நேரிடும் என்றாலும் சமாளித்துக்கொண்டு மிகவும் குறுகிய காலத்திலேயே உயர்துவிடுவீர்கள்.
ஏற்றத்தாழ்வுகள் இருந் தாலும் ஒரேயடியாக நீங்கள் வாழ்க்கை சீர்குலைந்து விடாமல் மிகவும் திருப்திகரமான நிலையே தொடர்ந்து நிலவும். வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள் கடைபிடிக்கும் நிதானந்தான் காரணமாக இருக்கும். உயர்ந்த ஒரு லட்சியத்தை நிர்ணயித்துக் கொண்டு அந்த லட்சியத்தை எட்டிப் பிடித்துவிட படாத பாடுபட்டுக் கடைசியில் வெற்றி விடுவீர்கள்.. நேர்மை, நாணயம், ஒழுக்கம் போன்ற பண்புகளில் நீங்கள் மிகவும் சிறந்து விளங்குவார்கள். உங்களிடம் அமைந்திருக்கும் உயர்ந்த குணப்பண்பு காரணமாக சமுதாயத்தில் பெருமையும் ஒரு நிரந்தரமான புகழும் உங்களுக்கு அமையும். பொருளாதார ஏற்றத்தாழ்வு உங்கள் வாழ்க்கையில் மாறி மாறி ஏற்படுவது வழக்கமாக இருந்தாலும் பணக்கஷ்டமேஉங்களுக்கு ஏற்படாது.