எண் நான்கு

பிறந்த தேதிகள்  4, 13, 22, 31

பொதுவான குணங்கள்

மேற் குறிக்கப்பட்ட நான்கு தேதிகளில் பிறப்பவர் மிகுந்த வாக்கு வன்மையுடையவர்களாகக் காணப்படுவர், பேசுவதன் மூலமும். எழுதுவதாலும், உலகையும் முக்கிய மாகத் தான் வாழும் சமூகத்தையும் சீர்திருந்த முற்படுவர். வாக்கில் வன்மைதான் இருக்குமேயன்றி இனிமை இராது. துடுக்காகவே அபிப்பிராயங்களை வெளியிடுவர். பகிரங்கமாகவே தெரிவிப்பர். கேட்பவர்கள் என்ன நினைப்பார்களென்று அவ்வளவாகக் கவலைப்பட மாட்டார்கள். வாழ்க்கையின் ஆரம்பத்தில் இப்படி இருந்த போதிலும் அநேகர் அனுப வத்தால் திருந்தி விடுகின்றனர். தம்முடைய அபிப்பிராயத்தையே ஸ்தாபிக்க விரும்புவர். யார் எது பேசினாலும் அதற்கு  மாறான விஷயங்களை உடனே கூறுவர். எதையும் ஆமோதிக்காமல் எதிர்த்தே அபிப்பிராயம் சொல்லுவார்கள்.

பிறர் கூறுகிற எந்த விதமான முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தீர விசாரித்து, விவாதித்து ஆராய்ந்து வரும் முடிவையே நம்புவார்கள். எவ் விஷயத்தைப் பற்றியும் ஒரு பிரத்தியேகமான அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். இந்த அபிப்பிராய மாறுதலை மனதுக்குள் வைத்துக்கொண்டு  கொண்டு காரியத்தில் காட்ட ஆரம்பித்தாலே தான் இவர்கள் வாழ்க்கை வெற்றியடையும் இல்லையேல் இவர்கள் சதா விரோதிகளை விருத்தி செய்து கொண்டே யிருப்பார்கள். மிக்க இளகின மனமும். எல்லோரையும் நண் பர்களைப் போல் பிரியமாக நடத்தும் தன்மையும் உடைய இவர்கள் அநேக நண்பர்களை  சுலபமாக சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனாலும் இவ்வெண்னிக்கையில் பிறந்த அநேகர் அதிக நண்பர்கள் உடையவர்களாகக் காணப்படுவதில்லை ; அதன் காரணம் இவர்களது அசிரத்தையும் ஆகும்.

எல்லோருடனும் பழகினாலும் ஆழ்ந்த நட்பை விரும்புபவர்களாதலால் அதற்கேற்ற  சிலரையே நண்பர்களாக ஏற்றுக்கொள்வர். மிகுந்த புத்தி சக்தியுடையவர்கள் இளமையிலேயே வாழ்க்கையைத் தீவிரமாக ஆராய முற்படுவர். கதைகள் சாத்திரங்கள் வேதாந்தம். மதம் சம்பந்தமான நூல்களெல்லாம் இவர்கள் மனதை வெகுவாகக் கவரும், இவர்களுடைய மிக முக்கியமான குணம் எல்லா விஷயங்களையும் தான் அறிந்திருக்க வேண்டும் என்பதுதான். எப்பாடு பட்டாவது விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பர். மற்ற சில எண்ணிக்கைகாரர்களைப் போல இவர்களுக்குப் புகழில் ஆசையிராது. மிகத் திருப்தியாக வாழவேவிரும்புவர். உணவு விஷயத்தில் ரொம்பவும் சிரத்தையாக இருப்பார்கள் சாப்பாடு சிற்றுண்டி இவைகளில் தீவிரமான மன நாட்டம் இருக்கும்,  நோய் ஒன்றும் இல்லாத போதும் இவர்களோ எதாவது பலவிருத்தி ஆயுள் விருத்திக்கு மருந்து சாப்பிடலாமா என்று கேட்பார்கள்.

பிறர் சொல்லும், சிறு செயலும் கூட இவர்களைத் துன்புறுத்திவிடும். சீக்கிரம் மனம் நொந்து போவார்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். விசாலமான இதயம் படைத்த இவர்கள் நண்பர்களிடத்து மிக்க பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர். பணம் சம்பாதிப்பது இவர்களுக்கு மற்ற சில எண்ணிக்கையுடையோரைப் போன்று சுலபமாக அமையாது. ஒவ்வொரு காசும் சிரமப்பட்டேதான் சம்பாதிக்க வேண்டியிருக்கும். இருந்த போதிலும் அப்படிக் கிடைக்கும் பணத்தை மிக்க குதூகலத்துடன் செலவளிப்பர், இவர்களுக்குப் பணம் செலவளிப்பதில் உற்சாகம் இருக்கும். எல்லா அழகான பொருள்களையும் வாங்கிச் சேர்க்க முற்படுவர்.

சிறு வயதில் ஓடி விளையாடக் கூடிய விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும். யுவ வயதில் சுகமான வாழ்க்கையிலும், முன்னேற்றத்திலும் தீவிர ஆசை இருக்கும். வயது ஏற ஏற வேதாந்த விடியங்களிலோ அல்லது சமூக சேவைகளிலோ தீவிர ஈடுபாடு உண்டாகும். மூன்று எண்ணிக்கைக் காரர்கள் தேசீயப் போராட்டங்களிலும் வருவதுவரட்டுமென இறங்கிடுவார்கள். தாம் கஷ்டப்படாமல் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தீர்மானிக்கும் காரியங்களில்தான் இறங்குவார்கள்;

×
×

Cart