பிறந்த தேதிகள் 1, 10, 19, 28
பொதுவான குணங்கள்
வாழ்க்கையில் பிரகாசமுள்ளவர்களாகத் திகழும் இவர்கள் நேர்மை மிக்கவர்கள். கம்பீரமாகவே வாழப் பிரியப்படுவார்கள்.
சிறப்பான நடை உடை பாவனைகளையே விரும்புவர். வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் திருப்தியுடன் அனுபவிப்பார்கள். சௌகரியத்திற்காகப் பணத் தைச் சிறிதும் தயங்காமல் செலவளிப்பார்கள். நுண்ணிய அறிவுடைய இவர்கள் எக்காரியத்தில் ஈடுபட்டாலும் தீவி ரமாக வேலை செய்வார்கள். ஆகையால் இவர்களது முயற்சிகள் தடையின்றி வெற்றிபெறும். நிதானித்தே எக்காரி யத்திலும் இறங்குவார்கள். எக்காரியத்திலும் ஈடுபட் பின்னர் பின்வாங்குவது இவர்களிடம் கிடையாது. எதிர்ப்புக்களை கண்டு அஞ்சமாட்டார்கள். துணிவுடன் முன்னேறி வெற்றியடைவர். உத்தியோக வாழ்க்கையில் நாணயமும் கண்டிப்பும் இவர்களிடம் மிகுந்து காணப்படும். கபடம், வஞ்சகம், இரகசியம், முதலியவை இவர்களிடம் கிடையாது இவர்கள்’ மனதில் உள்ளதை ஒளிக்காமல் சொல்லிவிட்டுப் பல விரோதிகளை சம்பாதித்துக் கொள்வார்கள். இவர்களுடைய நட்பு , விரோதம் எல்லாம் பகிரங்கமாகவே இருக்கும். இவர்கள் தாமாகவே நண்பர்களைத் தேடிக்கொண்டு போகமாட்டார்கள். இவர்களது குணங்களும், உதவி புரியும் தன்மையும் இவர்களுக்கு நண்பர்களை உண்டாக்கி தரும்.
இவர்களுக்கு சுதந்திர உணர்ச்சி அதிகமாதலால் சுல பமாக எவருக்கும் கீழ்ப்படிய மாட்டார்கள். சுய கௌரவம் அதிகம் பாராட்டுவார்கள். உத்தியோகத்திலும் எவ் வளவு பெரிய பதவி வகித்த போதிலும் மேலதிகாரிகள் சிறிது கௌரவக் குறைவாக நடத்தினாலும் இவர்கள் வேலையை ராஜினாமா செய்வர். இவர்களுக்கு முகஸ்துதி செய்யத் தெரியாது. நுட்ப அறிவுடையவர்க ளாதலால் பல விஷயங்களை மிக எளிதாக அறிந்து கொண்டு விடுவார். சோதிடம், வைத்தியம், யோகம் முத லிய கலைகளைப் பற்றியும், சித்திரம், சிற்பம், சங்கீதம் முதலியவற்றைப் பற்றியும் தேர்ச்சி பெற்றவர்கள் போல் பேசுவார்கள். ஊகித்தறியும் சக்தியுடையவர்களாதலால் பழகுகிற மனிதர்களை வெகு சீக்கிரம் எடை போட்டு விடு வார்கள். இவர்களுக்குச் சிறிது பயிற்சித்தால் பிரசங்கசக்தியும், எழுத்து வல்லமையும் உண்டாகும். இவர்களில் மேன்மையானவர்கள், எல்லாம் தெரிந்த போதிலும் ஒன்றும் அறியாதவர் போன்று அடங்கி இருப்பர். பரம்பரை வியாபாரியாக இருந்தாலும் உயர்ந்த முறையிலேபிரசித்தமாக வியாபாரம் செய்ய வேண்டுமென விரும்பு வாரேயன்றி, எப்படியாவது அதிக இலாபமடைய வேண்டுமென விரும்பமாட்டார். கலைகளைத் தொழிலாகக் கொண்டால் பிரமுகர்கள் ஆதரவு ஏற்படும்வரை சிரமப்படுவார்கள். இவர்களுக்குப் பணம் தானாக வரவேண்டுமேயன்றி அதைத்தேடி அடையும் திறமை கிடையாது. ஆகையால் சலிப்பின்றி உழைப்பார்கள். பொதுவாக இவர்களில் சோம்பேறிகள் காணப்படுவதில்லை. பல பேருடன் பழகிய போதிலும் சிலரையே நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுவர். அப்படி ஆராய்ந்த பின்னர் புழகும் சிநேகிதர்களுக்கு மனமுவந்து நன்மை புரிவார்கள். இவர்கள் ஒருகாலும் பிறர் சொத்துக்கு ஆசைப்படமாட்டார்கள்.
கவிஞர்கள், கலைஞர்கள், வைத்தியர்கள், அரசியல் வாதிகள், வியாபாரிகள், முதலான பலவிதமான தொழில் புரிபவர்களிலும் இந்த எண்ணிக்கையுடையோர் காணபட்டாலும் மிகமிக அதிர்ஷ்டசாலிகளாகக் காணப்படுவது அரசியலில் தான். இவர்களை அரசாங்கத்தின் “சுவீகாரப் புத்திரர்கள்” என்று கூறின் ஒருகாலும் மிகையாகாது. சூரியன் (இவர்களுக்கு ஆளும் அதிர்ஷ்டத்தைத் தருகிறான். அரசாங்கங்களில் பெரும் பதவிகளில் இவர்களே நிலையாகஇருக்கின்றனர். நாகரீகமான எல்லாப் பொருட்களையும் வாங்கி வைத்து வீட்டை அலங்கரிப்பார்கள். எப்பொழுதும் சுத்தமான உடைகளையே அணிவர். இயற்கைக் காட்சிக ளில் மனதைப் பறிகொடுக்கக் கூடியவர்களான இவர்கள் மலை பிரதேசங்களை வெகுவாக விரும்புவர். உலகப் பிரயாணம் செய்ய ஆவலிருக்கும். மேற்கூறிய குணங்கள் பொருந்தியிருப்பின் சூரிய ஆதிக்கம் நன்கு அமைந்திருக் கிறதென்பதை அறியவும். ஆதிக்கத்தின் பலம் குறைந்தால் கீழ்க்கண்ட சுபாவங்கள் காணப்படும். பிறர் தன்னைப் பற்றி பெருமையாக நினைக்க வேண்டுமென நினைத்து வீண் செலவு செய்வார். அடக்கம் சிறிதுமின்றி எல்லாம் தெரியுமென்று சொல்லித்திரிவார். செய்யாததையெல்லாம் செய்ததாகச் சொல்லுவார். வாழ்க்கையில் சிக்கல்களும் முயற்சிகளில் தோல்வியும் காண்ப்படும். எவ்வளவு தான் சூரிய ஆதிக்கம் குறைந்தாலும் இவர்களுக்குப் பிறருக்கு தீங்கு புரியும் எண்ணம் உண்டாகாது. கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று பயப்படுவர். தன்னம்பிக்கை குறைந்தால் பிறர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கை நடத்துவார்கள்.