பிறந்த தேதிகள் 9, 18, 27
பொதுவான குணங்கள்
இவர்கள் போராடவே பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதிலும் ஒரே போராட்டமாக இருக்கும். இவர்களில் அறிவு மிகுந்தவர்கள் மனப்போராட்டத்தில்தான் ஈடுபடுவார்கள். அதாவது சாகஸம், தந்திரம், சூழ்ச்சி, கபட மொழிகள். சுருங்கக் கூறின் உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசும் கலையில் நுண்ணிய அறிவில்லாத அடுத்த ரக மனிதர் வாய்ச் சண்டையிலும் வாழ்நாளைக் கழிப்பர்.கடைசிரக மனிதர் சண்டையையே தொழிலாகக் கொண்டு விடுவார். இவருக்கு சாதாரணமாக அடிபிடி சண்டைகளில் சுவாரஸ்யமிருக்காது. ரணகளங் களும், ஊர்கள் பற்றி எரியும் காட்சிகளுமே இவர்களது மனதைக் கவரும். இவர்களுக்கு சாந்தி சமாதானம் முதலியவகைகளில் ஈடுபாடில்லை. பொதுவாக இவர்கள் எல் லோருக்குமே தேச சேவை செய்யவேண்டுமென்கிற ஆர்வம் பூரணமாக இருக்கும். தேசத்திற்காக எதையும் தியாகம் செய்து போராடுவார்கள்.
இந்த ஆதிக்கரில் மிகக் குறுகிய நோக்கமுடையவர்கள் கூட தன் இனத்தவருக்கு நன்மை புரிவதில் நாட்டமுடையவராகக் காணப்படுவர். இவர்களுக்குத் தன்னிஷ்டப்படியேதான் காரியங்களை நடத்திச் செல்ல விருப்பமிருக்கும். யாராவது ஆட்சேபித்தால் உடனே போர் மூழும். இவர்களிஷ்டப்படி செய்யமுடியாத படி பிறர் தடுத்துவிட்டால் உடனே கையை உதறிவிட்டு இக்காரியம் தூள்தூளாகச் சிதறட்டும் என விலகி விடு வார்கள். இவ்வாதிக்கரில் அறிவுடையோர் எப்பொழுதும் எதிரியின் பலத்தை ஆராய்ந்த வண்ணமிருப்பர். அதை அனுசரித்தே நடந்துகொள்வதால்தான் இவர்கள் சண்டையில் லாபமா, சமாதானத்தில் லாபமா என்பதை ஆராய்ந்து உசிதமானதைச் செய்வார்கள். (அச்சமயங்களில்தான் இவர்களை உலகத்தார் சமாதானப் பிரியர் என்றும், கோபமே வராத சாந்தர் என்றும். பயங்கொள்ளி என்றும் நினைத்து ஏமாறுகின்றனர்) ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கு மாங்கொக்கு என்பது போல் சந்தர்ப்பத்தையும் சூழ்நிலை யையும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சண்டையில் நஷ்டம் என்றால் உடனே சமாதானப் பிரியராகக் காட்சி யளிப்பார்கள். சமாதானம் செய்து கொள்ளும் போதுஇவர்களுக்கே சாதகமான முறையில்தான் முடிப்பர். எண்ணின் பலம் குறைவானால் மேலே குறிப்பிட்ட குணங்களிருக்காது. கோபம், அழுகை முதலியவை மிகுந்திருக்கும். சண்டையிலே உயிரிழப்பர். முரட்டுத் தனத்தால்கெடுதிகள் விளையும் ஆதிக்கம் நன்கைமந்தால் கூரிய அறிவும் வளைந்து கொடுக்குந் தன்மையும் ஏற்பட; ஆதிக் கம் கெட்டால் தீய குணங்களும், முரட்டுப் பிடிவாதமும் காணப்படும். சிறிய காரியங்களுக்குக் கூட உயிரைப் பணயமாக வைப்பார்கள். அறிவாளி எதிரியைக் கொல்லாமல் கொல்லுவார். மற்றவரோ எதிரியைக் கொல்லவே கொல்லுவார்.
இந்த ஆதிக்கரில் அறிவாளியை எப்படி அறிவது கவனிக்க: இவர்களில் அறிவாளிகள் மற்றவர் பேசும்போது குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களை எதிர்த்தாலும் பொறுமையுடன் எதிரியை ஆராய்ந்து கொண்டிருப்பர். மனதிற்குள் ‘இவரை எப்படி வீழ்த்துவது’ எனத் இருப்பர். எவ்வளவு கேட்டாலும் மனதிலுள்ளதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் சாமர்த்தியம்தான் காணப்படுமேயன்றி துடுக்குத் தனமிராது. ஆனால் இவர்களில் சாமான்யரோவெனில் சீக்கிரமே அபிப்பிராயங்களை வெளியிட்டு விடுவார்கள். கோபதாபங் களை வெளிக்குக் சாட்டிக்கொண்டு விடுவார்கள். கூர்மையான அறிவுடைய இவர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதுண்டு. இவர்களில் மிகச் சிறந்த தத்துவஞானிகளும், அறிஞர்களும் சகஜமாகக் காணப்படுவர். பிறந்த தேதி எண்களில் ஒரு எண் 9 ஆக இருந்தால் அது மற்ற எண்ணின் தன்மைளைத் தீவிரப்படுத்தும். இரண்டு எண்களும் 9 ஆகவே இருந்தால் பெயர் குறிக்கும் குணங்களைத் தீவிரமாக்கும். இவர்களுக்குத் தளராத உறுதியும், போராடும் சக்தியும் இருப்பதுடன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைக் கண்டு பிடிப்பதிலும் ஆர்வமிருக்கும். இவர்களுக்கு ரசாயனம், வைத்தியம் முதலிய சாஸ்திரங்களில் மிகுந்த ஆர்வமும் தேர்ச்சியும் உண்டாகும். தெய்வீகமான ரகஸ்யங்களையும் அறிந்து அதனால் உலகினருக்கு வழி காட்டுபவர்களும் இவர்களே. இவர்களிடம் சில அபூர்வ சக்திகள் காணப்படும். இப்படிப் பட்டவர்கள் புகழை விரும்பாமல் ஜனங்களிடமிருந்து ஒதுங்கியே வாழ்வார்கள்.
இனி இவ்வாதிக்கரின் வாழ்க்கையைக் கவனிப்போம் இவர்களது வாழ்க்கை முன் கூறியபடி ஒரு ஓயாத போராட்டமே. பல ஆபத்துக்கள் வந்து விலகும். நற்காரியங்கள்செய்யும் போதெல்லாம் அவை நல்ல பலன்களையே கொடுத்துக் கொடுத்து ஊக்கமளிக்கும் பரோபகாரமானசெயல்களில் ஈடுபடுவர். அனுபவசாலியெனப் புகழப்படுவர். வஞ்சகர்களாலும், ஏமாற்றுகிறவர்களாலேயும் இவர்கள் சூழப்படுகின்றனர். இந்த எண்ணைப் பற்றிக் கூறும்போது பழைய நூல்கள் ‘அறிவெனும் தீபம் தாங்கி காலின்கீழ் இருக்கும் பாமபைக் கவனியாமல் ரத்தக்கறை படிந்த பாதையில் தனியே போகும் அனுபவசாலி, எனக்குறிக்கிள்றனர். இவர்கள் சூழ்ச்சி நிறைந்தோருடன் வாழ நேரும். இவர்கட்குப் புதுப்புது யுத்திகள் தோன்றும், நிதானத்தை இழக்காதிருந்தால் இவர்களே வெற்றியடைவர். இவர்களில் அநேகருக்கு ஆரம்ப வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். தோல்வியைக் கண்டு ஒருநாளும் கலங்கமாட்டார்கள். எவ்வளவு கஷ்டம் வரினும்தாங்கிக் கொள்ளும் சக்தி உண்டு.
எண்ணின் ஆதிக்கம் குறைவானால் பலஹீனராயும், மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவராயும் ஆகிவிடுவார்.ஆதிக்கம் நன்கு இருந்தால் எப்பொழுதும் மனதில் உற்சாகமிருக்கும். சினிமாக் கொட்டகை முதலிய இடங்களில் எல்லோரையும் தள்ளிக்கொண்டு போய் முண்டியடித்து டிக்கட்டு வாங்குகிறவர்கள் இவர்களே. சிரித்த முகத்துடனேயே காணப்படுவர். பிறருக்கு ஊக்கம் கொள்ளும் படிதைரியம் சொல்லுவார்கள். பணம் சம்பாதிப்பது இவ்வ வளவு சாமர்த்தியமுடையவர்களுக்கு ஒரு பிரமாத காரியமா? மனதுக்குப் பிடித்த வழிகளில் தாராளமாகச் செலவும் செய்வார்கள். நல்லோர்களிடம் மரியாதையுடன்நடந்து அவர்களது நன்மதிப்புக்குப் பாத்திரராக நடந்து கொள்வார்கள். மனமொத்த நண்பர்களுக்காக எந்த உதவியையும் செய்வார்கள். மனதுக்குப் பிடித்த வகைகளிலெல்லாம் யோசனையின்றிப் பொருளைச் செலவழிப்பார்கள். இவர்களில் தீயோரும் உண்டு. அவர்கள் தீராத ஸ்திரீமோகம் உடையவர்களாயும், லாகிரி வஸ்துக்களை அருந்துபவர்களாயும் பிறரை இம்சிப்பதில் ஆனந்தம் அடைபவர்களாயும் காணப்படுவர். இவர்களுக்கு மிருக சுபாவங்களே மனதில் குடிகொண்டிருக்கும். தன் சுகமே பெரிதெனக் கருதுவர். ஆனாலும் இவர்களுக்கு ஒரு விசேஷ குணம் இவரைக்கருணையுடன் நோக்கினால், உணர்ச்சி வசப்பட்டு இவர் உடனே அவர்களைப் பணிந்து நல்லவராகி விடுவர். இவர்களுக்கு அபூர்வமான கனவுகள் மூலம் திருவருள் வளரும். இவர்கள் மனதை யுத்தம் செய்த கடவுள் அம்சங்களே கவரும். இராமர், காளி, சுப்ரமணியர், அனுமார் முதலிய மூர்த்திகளையே உள்ளன்புடன் வழிபடுவர்.