பிறந்த தேதிகள் 5, 14, 23
பொதுவான குணங்கள்
“சீக்கிரம், சீக்கிரம், வேகமாக” என்று பிறரைக் கட்டளையிடுவார்கள் .
இராஜஸ் குணம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு உலகமே ஒரு தாமதமான முட்டாள் கூட்டமாகத் தோன்றும் வெகு சீக்கிரமே எந்த விஷயத்தையும் கிரகித்துக் கொள்வார்கள். வேகமாகவும் பேசுவார்கள். பிறர் புரியவில்லை என்று சொன்னால் கோபந்தான் வரும் இவர்களது யோசனைகளும் புத்தியும் மின்னல் போன்ற வேகமுடையவை. மற்றவர்கட்கு வெகு நாட்கள் யோசனையின் பேரில் வரும் முடிவுகள் எல்லாம் இவர்களுக்கு உடனே தோன்றிவிடும். ஆகையால் தன் முன்னேற்றம் சதா தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களின் தாமத குணத்தால் அல்லது மெதுவான இயல்பால் பெரிதும் பாதிக்கப் படுவதாகக் கூறுவர். இவர்களில் அதிக வேகமடையவர் களின் கருத்துக்களைப் பல சமயங்களில இவர்களது வாழ் நாளுக்குப் பிறகே உலகோர் அறிந்திருக்கின்றனர். மிக எளிதில் குழந்தைகள் போல எவரிடமும் சுலபமாகப் பழகி விடுவார்கள். மனதில் தோன்றுவதை சுலப மாக வெளியிட்டு விடுவார்கள்; ஒன்றையும் மறைக்கத்தெரியாது; சுற்றியிருப்போர் இவர்களது காதல் விவகாரங்களைக் கூட சுலபமாக அறிந்து விடுவர்.எதையும் மிகச் சுலபமாகச் சாதித்து விடலாம் என்று உண்மையாக நம்புவார்கள். ஆகையால் எவ்வளவு பெரிய காரிபமாக இருந்தாலும் சிறிதும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து இறங்கி விடுவார்கள். நிச்சயமில்லாத சூதாட்டம் போன்ற தொழில்களிலும் காரியங்களில் கூட வெற்றி நிச்சயம் என்று கூறிக்கொண்டு இறங்கி விடுவார்கள். இவர்கள் இப்படில்லாதிருப்பின் நாம் வாழ்க்கையில் எவ்விதமான முன்னேற்றத்தையும் அடைந்திருக்கமாட்டோம், ‘பிறர் செய்யமுடியாததைத் தான் செய்யவேண்டும்” என்பதே இவர்களைத் தூண்டும் அவா. பழைமையை வெறுப்பர். புதுமையை நோக்கி விரைவர். புதுமையாகக் கண்டு பிடிக்கப்படும் பொருட்களெல்லாம் நன்மைக்கே என்று நம்புவர் மற்றவர்களைப் போலத் தானும் இருக்கலாகாதென எண்ணுவார்கள். நாகரிக மனிதர். அறிவாளிகள் பெரிய கருத்துக்களையும் சமூக மாறுதல்களையும்உலகினரிடை புகுத்துவர். இவ்வெண்ணின் சக்தி குறைந்தோர் புதுப் புது மாதிரியா்ன உடைகள் நகைகள் அணிந்து நாகரிகத்தைப் பரப்புவார்கள். மேன்மையானவர்கள் எல்லோராலும் போற்றப்பட்டு, மேலான காரியங்களைச் செய்தவண்ணமிருப்பார் கீழ்த்தரமானவர்கள் பிறரை எளிதில் வஞ்சித்தே சிறிதும் பயமின்றி வாழ்வர் அவர்கள் அஞ்சாறு பொய் பேசியும் மற்றவர்களை நம்பச் செய்து ஏமாற்றியுமே வாழ்நாளைக் கழிக்கின்றனர். பிரசித்தமான மோசடிகள் நடக்குமிடங்களில் இவர் பங்காளியாக இருப்பது நிச்சயம். இவ்வெண்ணிக்கையுடையோர் தீயவராக இருத்தல் விரும் பத்தக்கதல்ல என்கிற காரணத்தால் மேன்மையான குணங்களைப் பழகி அடைவதை முன்னிட்டு இத்துடன் அவர்கள் தீய சுவாபங்களை விவரிக்காமல் விடுகிறேன். திட்டமான மேன்மையான வாழ்க்கையை நடத்திப் பொருளும் புகழும் அடைந்து இருப்பதே யாவரும் விரும்புவதாகும். சிறுவயதிலிருந்தே யாருடன் பழகினாலும் அவர்களது குணங்களையும் பழக்கங்களையும் சீக்கிரம் கிரகித்துக் கொள்வர். ஆகையால் பெற்றோர் இவ்வெண்ணின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைகளை, மேன்மையான குறிக்கோள் உடையவர்களது உதாரணங்களையே போதித்து நல்ல சகவாசத்சிலேயே வளர்க்க வேண்டியது மிக்க அவசியம். இன்று எப்பொழுதும் உற்சாகமாகவே காணப்படும் இவர்கள் தோல்வியால் மனம் வருந்தார். உடனே அதற்கு தகுந் தாற் போல முயற்சித் திட்டத்தை மாற்றி அமைத்து வேலை தொடங்குவார். வெர்கள் த்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்விகள் இவர்கட்குக் கிடையா. தோல்வி போல் தோன்றுபவை, பின்னர் நன்மைக்காக ஏற்பட்ட மாறுதலே என்பது விளங்கி சீடும்.
இவர்களது அறிவு, உணர்ச்சி தூண்டுதலாலேயே இயங் குவதால் என்ன செய்ய வேண்டுமென்று மனத் தூண்டுதல் உண்டாகிறதோ அதைத் துணிந்து செய்யவேண்டும். பிற ருக்குச் சரியென்று தோன்றாத விஷயமானாலும் அதைப் பற்றி சட்டை செய்யாமல் தோன்றுகிறபடி செய்ய வேண்டும். உலகளாவிய அறிவு என்று கூறப்படுகிற ஈஸ்வர சித்தம் இவர்களது புத்தியை ஆட்சி புரிகிறது. ஆகையால் ‘ஏன்” என்று கேட்காமல் புத்தியில் தோன்றுகிறபடி. இவர்கள் செய்தால் பின்னர் “ஏன்” என்பது தானே விளங்கும். புத்தியின் தூண்டுதலின் படி நடந்து கொள்வ தால் எவ்வளவு பெரிய ஆபத்து சூழ்ந்தாலும் அதிலிருந்து தப்பிவிடுவர்.
பணம் சம்பாதிப்பதற்காகக் கஷ்டப்பட்டு உழைக்க பிரியப்படமாட்டார்கள். மனம் சதா சுலபமாக நிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய தொழில்களையே நாடும், வெகு எளிதில் மிகப் பெரும் தொகைகள் சம்பாதிக்கும் திட்டங்கள் இவர்கள் மனதில் சதா உருவாகிக் கொண்டிருக்கும். கவலையில்லாமல் அகப்பட்டதை செலவழிப்பார்கள். எத்தொழில் புரிந்தாலும் செல்வந்தராகக்கூடிய இவர்கள் சூதாட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது அவசியம். அப்படி. ஈடுபட்டால் சிறிது வெற்றிக்குப் பிறகு தொட்டதெல்லாம் தோல்வியாக முடியும். ஏனெனில் இவர்களது புத்தியைப் பிரகாசப்படுத்தும் அறிவு இவர்கள் மூலம் உலகில் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக இயங்குகின்றதேயன்றி இவர்களது தனிப்பட்ட லாபத்தை மாத்திரம் கருதியன்று. இதை மறக்காதிருக்கவும். இதுவே சிருஷ்டியில் இவர்கள் வசீகரமாகவும், அதிர்ஷ்டசாலிகளா கவும் படைக்கப்பட்டதின் ரகசியம்.
ஐந்து எண்ணிக்கையில் பிறக்கும் ஸ்திரீ புருஷர்களுக்கு சபல சித்தம் அதிகம். கண்டதும் நேசிக்க ஆரம்பித்துவிடுவர். (சிலர் சமூகக் கட்டுப்பாடுகளை சிறிதும் பொருட் படுத்த மாட்டார்கள். அவசரப்பட்டு மணந்து கொண்டு பின்னால் அவதிப்படுவதுமுண்டு). கல்யாண விஷயங்களில் ஜாக்கிரதையுடனும் முன் யோஜனையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஸ்திரி புருஷ விஷயங்களில் நிதானம் மிகவும் தேவை. 9, 13, 27 திகதிகளில் பிறந்தோர் இவர் கள் மனதை நொடியில் கொள்ளைகொள்வர். இவர்களை மனதார நேசித்த போதிலும் இவர்களுக்கு அடங்காமல் இவர்களை ஆட்டி வைத்துவிடுவார்கள் ஜாக்கிரதை.