பிறந்த தேதிகள் 7, 16, 25
பொதுவான குணங்கள்
பார்த்த மாத்திரத்தில் இவர்களை கண்ணியமான மனிதர் என்று அறியலாம். சுத்தமான ஆடைகளையே எப்பொழுதும் அணிவர். அலங்காரப் பிரியரல்லவென்றாலும் நாசூக்காக உடையணிபவர்கள். வசீகரமான முக அமைப்பும், உயரமான தோற்றமும் உண்டு. கலகலப்பாகப் பழக மாட்டார்கள். வார்த்தைகளை மிகவும் நிதானித்தே உபயோகிப்பர். தன்னம்பிக்கை மிகுந்திருக்கும் போது வாயாடிபோல் அதிகம் பேசுவர். குறைந்தாலோ ஊமையோ என்று நினைக்கும்படி மௌனம் சாதிப்பார்கள். இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்பொழுதும் அபிப்பிராய பேதம் இருந்துகொண்டே இருக்கும். ஆகையால் இவர்களுக்கு உண்மையான சினேகிதர்கள் வாழ்க்கையில் அமைவது வெகு துர்லபம். இவர்களில் பெரும்பாலோர் முன்
கோபக்காரர்கள். சட்டென ஆத்திரம் மீறும். சந்தோஷமான சூழ்நிலையில் இருந்தால் சகஜமாகப் பழகுவார்கள்.இல்லாவிடில் சதா ஏகாந்தத்தை விரும்புவர். மனித சகவாசத்தை விட ஏகாந்தம் இவர்களுக்கு இனிக்கும். கஷ்டம் வந்தாலும் துக்கம் ஏற்பட்டாலும் பிறரிடம் சொல்லி ஆற்றிக்கொள்ள மாட்டார்கள். மனத்திற்குள்ளேயே புழுங்கிப் போவார்கள். அடிக்கடி ஏதோ பறி கொடுத்தவர்கள்போன்று காணப்படுவர், இவர்களை கலைகளைப் பொறுத்த வரையில் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் பிறவியிலிருந்தே தீவிர கலை நாட்டம் உடையவர்களாக இருந்து கலைகளையே வாழ்வின் லக்ஷியமாகக் கொள்வர். மற்றப் பிரிவினரோ கலைகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகி கலையைப் பொழுதை வீணாகும் மதியீனமாகக் கருதுவர், சங்கீதம், கவி பாடுதல், ரசாயன ஆராய்ச்சி பிர மிக்கத் தகுந்த முறையில் எழுதும் திறமை ஆகியவை இவர்களுக்குப் பிறவியிலேயே உள்ள சொத்தாகும். பிறந்த தேதி மாத்திரம் 7 எண்ணாக உடையவர்கள் தீவிர தேசப் பற்று உடையவர்களாக இருந்து பின்னர் மாறிவிடுவர். ஆனால் தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டி வரு கிற எண் 7 ஆக வந்தாலும், பெயரின் எண் 7 ஆக வந்தாலும் திடீரென எல்லாவற்றையும் திபாகம் செய்து அரசியலில் குதிப்பர். 4 எண்ணிக்கைக்காரர்களைப் போன்றதே இவர்களது சுபாவமும், அவர்களைப் போலவே இவர்களும் பலமாக இருக்கும் கட்சியில் சேராமல் துணிவாக பலமில்லா எதிர்கட்சியில் சேர்ந்து அதைப் பலப்படுத்துவார்கள். இவர்கள் உற்சாகமெல்லாம் எதையோ எதிர்ப்பதில்தான் வலுவாக இருக்கும். எதிர்ப்பே இவர்களுக்குஉற்சாகமூட்டும். கஷ்டங்கள் இவர்களைத் தீவிரவாதிகளாக்கும். எதிர்ப்பென்பது இவர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படும். இவர்களுடைய நியாயமான வெற்றிகள் கூட பிறரை இவர்களிடம் பொறாமை கொள்ளச் செய்யும்.
ஏழு எண்ணன் கீழ் பிறப்பவர்களில் ஆயிரத்தில் ஒரு வருக்குக் கூட மனதிற்கிசைந்த மனைவியோ, கணவனோ வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தது போல் காணப்பட்டால் குழந்தைகள் பிறவாமலும், மற்ற பல விதங்களிலும் குடும்ப வாழ்க்கை பிரகாசமற்றதாகும். அனால் இவர்கள் அதிஷ்டமானதும் ஓத்ததும் ஆன பெயர் உடையவரானால் வாழ்க்கையின் பிற்பகுதியில் எல்லாக் குறைகளும் நீங்கி விடுகன்றன. பொதுவாக,இவர்களுக்கு சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமைவது மிக துர்லபமே. இந்த எண்ணின் கீழ் பிறக்கும் சில பெண்களுக்கு அவர்களுக்கு மேற்பட்ட அந்தஸ்திலுள்ள கணவன் வாய்ப்பதுண்டு. (பொதுவாக 7 எண் பெண் களில் சிலர் நல்ல அழகாக இருப்பர். அனேகர் அங்கவளர்ச்சியற்று இருப்பர்). இவர்கள் எல்லோருமே நல்ல உழைப்பாளிகள் , வேலையில் மூழ்கிக் கிடப்பார்கள். சூழ்நிலை சரியாக இருந்தால் எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிப்பார்கள்.
முக்கிய குறிப்பு :-
இவர்களுக்குச் சரீர பலத்தை விட பலமடங்கு மனோ பலமே அதிகம். சிறிய கஷ்டம் வந்தாலும் அது மிகப் பெரியதாகி விடுமென கற்பனை செய்துகொண்டு வீணே கலங்குவார்கள். எதிர் காலத்தைப் பற்றிய கவலைகள் இருந்துகொண்டே இருக்கும். சூழ்நிலைகளால் சுலப மாகப் பாதிக்கப்படக் கூடிய இவர்கள், உற்சாக மூட்டக் கூடியவர்களால் சூழப்பட்டால் (பொதுஜன ஆதரவுஇருந்தாலும்) துணிந்து மிகப் பெரிய காரியங்களிலும் ஈடு பட்டு வெற்றி காண்பர்.சகஜமாக இவர்கள் பிறரைப் பின்பற்றவே மாட்டார்கள். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் சுதந்திர மனப்பான்மையையும். பிரத்தியேகமான கருத்துக்களையும் வெளியிடுவர். சுலபமாக இவர்களை மக்கள் பின் பற்றுவர்.இவர்களது வாழ்க்கை இவர்களுக்கு ஒருவித காந்த
சக்தி இருப்பதை நன்கு ஊர்ஜிதப்படுத்தும். இவர்களது வாழ்க்கை ஏனையோரை மிகவும் கவரும். கவர்ச்சி இருந்தும் இவர்களில் பெரும்பாலானோர் துரதிர்ஷ்டசாலிகளாகவே காணப்படுகின்றனர். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதை மிகமிக நிச்சயமாகக் கூறலாம். பிறவியிலேய அபூர்வமான சக்திகளை (மூளை அமைப்பை) உடைய இவர் களில் சிலர் சலியாத உழைப்பினால் மேன்மையடைகின்றனர். மஹான்களாகவும் மேதாவிகளாகவும் காணப்படுபவர் மேன்மையடைந்தவர்களல்ல. உழைப்பினால் உயர்ந்தோரேயாவர். குழந்தைப் பருவத்தி லேயே சங்கீத வித்வானாகவோ, சிறந்த நடிகராகவோ, அல்லது பெரிய மேதையாகவோ பிரகாசிக்கிறவர்கள் இந்த எண்ணின் ஆதிக்கரே.
இவர்களில் அநேகருக்கு கனவுகள் சகஜமாகப் பலிக் கும். பலருக்கு தெய்வீகமான காகஷிகள் ஏற்படுவதுண்டு. மனோவசிய சக்திகள் வளர்ந்த போதிலும் இவர்களில் அநேகர் விரும்பும் திரிகால ஞானமும், அதையொத்த ஸித்தி ஏற்படுவதில்லை காரணம் என்னவெனில் இவர்கள் முற்றுப்பெறாத இச்சைகளுடன் வாழ்க்கை வாழவே பிறந்தவர்கள். கடைசி வரை ஏதாவது குறை இருந்துகொண்டே இருக்கும். சாதாரண விஷ யங்களில் கூட இவர்களது முயற்சிகள் முடிவை சந்திக்கும் போது முயற்சிகள் தட்டிப்போகும்.(பிறந்த தேதி எண்கள் 7, 2 ஆக இருந்தால் பெருத்த முன்னேற்றத்தையும் 7, 5 ஆக இருந்தால் எதிர்பாராத பெரும் வெற்றிகளையும் கொடுக் கும். 7, 9 ஆக அமைந்தால் வாழ்க்கை மேன்மையாக முடியும். ஆத்மீக வெற்றி நிச்சயம். மற்ற எண்களானால்கூட்டு எண் குறிக்கிறபடியே முடிவு அமையும்).
பின் வாங்குகிற அம்சமும் இவர்களுக்கு உண்டு. பெரிய காரியத்தைச் செய்தவர் அந்தஸ்துக்கு ஒவ்வாத சிறிய காரியத்திலீடுபடுவர். உன்னத நிலையிலே வாழ்ந்தவர் பின்னர் சாமான்ய வாழ்க்கை வாழ்வர் (பெயரும் 7 எண் வந்தால் இப்படி நடப்பது நிச்சயம்).
வெற்றி: சுயநலமற்ற நியாய்மான எக்காரியத்தில் (உளமார ) இவர்கள் ஈடுபட்டாலும் மகோன்னதவெற்றி கிட்டும். பெயர் அமரத் தன்மை அடையும்.
புகழ் எட்டு திசையும் பரவும். சரீர சுகத்தை தியாகம் செய்யச் செய்ய புகழும் வெற்றியும் அதிகரிக்கும். உலக அறிவு மிகும். இவர்களுடைய மேலான அபிலாஷைகளெல்லாம் சீக்கிரமே நிறைவேறும். களங்கமற்ற ஆவல்களெல்லாம் இனிதே முடிவு பெறும். குழந்தை மனம் பெற்றவரானால் எண்ணிய எண்ணங்களிலெல்லாம் வெற்றிபெறுவர்,