எண் எட்டு

பிறந்த தேதிகள்  8, 17, 26

பொதுவான குணங்கள்

இவர்கள் அளவுக்கு மிஞ்சின மனோ சக்திகளும் தெளிந்த  அறிவும் மிகக் கூர்மையான புத்தியும் உடையவர்கள். சதா யோசனைகளில் ஆழ்ந்திருப்பர். மிகப் பெரியபிரச்சனைகளால் மனம் கவரப்படும். மனதில் உற்சாகம் இராது. எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தவர் போலவே காணப்படுவர் சுகங்களையும் மனதார அனுபவிக்கமாட்டார்கள். (இந்த ஆதிக்கரில் பெருத்த அயோக்கியர்கள் எப்பொழுதும் சிரித்த வண்ணமிருப்பதுண்டு). சுகங்களை எவ்வளவு அனுபவித்தாலும் இவர்களுக்கு அவைகளால் திருப்தி உண்டாகாது. இவர்களுக்கு தன்னம்பிக்கை மிகக் குறைவு. வாழ்க்கையில் வெற்றி ஏற்பட்ட பின்னர்தான் இவருக்குத் தைரிய முண்டாகும். பிறரையும் எளிதில் நம்பமாட்டார்கள். பிறருடன் பழகுவதில் மிக ஜாக் கிரதையாக இருப்பார்கள். மனம் சதா ஏகாந்தத்தையே விரும்பும். பகுத்தறிவு மிகுந்த இவர்கள் எதிலும் நிதா னத்தையே கடைப்பிடிப்பார்கள். பணத்தைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம் வெளிப்படும். வாழ்க்கைக்கு உபயோகப்படக் கூடிய எல்லா சாஸ்திரங்களையும் நன்கு ஆராயவிரும்புவர். எப்பொழுதும் தம்மை உலகிலேயே ஒரு தனி மனிதராகவே கருதியிருப்பார்கள். இது அவர்களது பேச் சிலும் நடத்தையிலும் நன்கு புலப்படும். இவர்களுக்கு மிகச் சில நண்பர்களே ஆயுட்காலத்தில் ஏற்படுவார்கள். அவர்களாலும் இவர்கட்கு நீடித்த நன்மை ஏற்படாது. (2 ஆதிக்கருக்கு பயங்கொள்ளியானதால்அடுத்த படி இவரே சந்தேகத்திலும் பயத்திலும்) வாழப் பயந்து தற்கொலை மூலம் சாவை அணைக்கவும் முடிவு செய்யக் கூடியவர்கள். தற்கொலைக்குக் கூட சிரமந்தராத விஷத்தை நாடுவர் ஆபத்து சூழ்ந்த போது.

விதி:  இவர்களில் பலர் மிகச் சிறுவயதிலேயே ஆதர வளிக்க வேண்டிய தாய் தந்தையரை இழந்து கல்வி கற்கவும் சிரமப்படுகின்றனர். இளமைப் பருவம் இன்னல்கள்நிறைந்ததாக இருக்கும், மிக மிகச் சிரமப்பட்டே சிலர் இவர்களுக்கு ஒவ்வொரு சிறு சுகமும், வெற்றியும் கூட பெருத்த போராட்டத்திற்குப் பின்னரே கிடைக்கும். இவர்களது யோக்கியதைக்குத் தகுந்த சமூக அந்தஸ்தை அடைய இவர்கள்பெரும் போராட்டம் நடத்தியே தீரவேண்டும். பலர் சிறு வயதிலேயே கர்ம ரோகங்களால் பீடிக்கப்படுவதுண்டு.இவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். 8-ஐக் குறிக்கிற வயதுகளான8,17, 35, 44 வயதுகள் நடக்கும் போது மிக்க ஜாக்கிரதையாக இராவிடில் பெருத்த அபாயங்கள் நேரும் (பெயர் எண் 8 வருபவர்களுக்கும் 8-ஐக் குறிக்கும் வயது களில் முக்கிய சம்பவங்கள் நிகழும்.) இவர்களில் ஒரு சாரார் கஷ்டத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வர்: மற்றொருசாரார் நன்கு வாழும் போதே திடீரென விபத்துக்குள்ளாகி மடிவர், (தினசரிப் பத்திரிகைகள் வாசிக்கும் நேயர்கள் மரம் விழுந்து மாண்டார், இடிவிழுந்து இறந்தார், கார் ஏறி காலமானார், தீக்கிரையானார் முதலிய செய்திகள் வரும் போது பெயர் வயது தேதியை கவனித்தால் இவ்வுண்மை புலப்படும்.) பிறர் புரியும் குற்றத்திற்குக் கூட இவர்கள் அடிக்கடி ஜவாப்தாரியாகக் கருதப்படுவதுண்டு. மிக்க நல்லவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் மேதாவியாகவும் இருந்தாலும் இவர்களை அருகில்இருப்போர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. இவர்கள்

ஒருநாளும் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். சுய முயற்சியால் மேன்மையடைய வேண்டும்.  இவர்கள் மற்றவர்களை விட பகுத்தறிவு அதிகம் உடையவர்களாக இருப்பதால் இவர்களுக்கு மற்றவர்களுடன் சேர இயலாது. அதனாலேயே இவர்கள் தனி மனிதர்களாக நண்பர்கள் அதிகமின்றி வாழ்கின்றனர். (1, 4, 8 எண்ணில் பிறந்தவர்கள் அருகிலிருந்தால் உடனே இவர்கள் அவர்களை மனமொத்த இந்த 1,4, 8 எண்களாலே மாத்திரம்தான் இவர்களுக்குச் சுக முண்டாகும். மற்ற எண்களில் பிறந்தோர் தொடர்பு பயனற்றதாகிவிடும்.

×
×

Cart