இரண்டாம் எண்காரர் பிறந்த தேதிகள் 2, 11, 20, 29
பொதுவான குணங்கள்
மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராய்ச்சி இவைகளெல்லாம் இவர்களிடம் காணப்படும். இந்த ஆதிக்கரில் சிறந்தோர் பலர் பாவனை கூடிய சக்திகளை வளர்த்துக் கொண்டதன் மூலம் செயற் கரிய காரியங்களை செய்திருக்கின்றனர்.
கற்பனை சக்தியே இவ்வெண்ணின் கீழ் பிறந்தவர்களின் ஜீவநாடி. கண்ணெதிரில் காணும் விஷயங்களை விட கற்பனைகளே இவர்களது மனதைக் கவரும். சதா யோசனையிலும், மனோராஜ்யத்திலும் ஈடுபட்டிருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய வர்ண சித்திரங்களையோ, பயங்கர சம்பவங்களையோ நினைத்தவண்ணமிருப்பர். இவர்களுக்கு புதிய புதிய யுக்திகளும், நூதனமான யோசனைகளும் தோன்றிய வண்ணமிருக்கும் இவர்களுக்கு திடமான மனது இருக்காது.. தெய்வ பக்தியோ குருபக்தியோ, அல்லது தன்னம்பிக்கையோ இவர்களுக்கு ஏற்பட்டு விட்டால் தீவிரமாக வளர்ந்து வந்து வாழ்க்கையின் அடிப்படையாகிவிடும். திடநம்பிக்கை மாத்திரம இவர்களுக்கு ஏற்பட்டு விட்டால் இவர்கள் செயற்கரிய காரியங்களை வெகு எளிதாக செய்து முடிப்பார்கள். தெய்வ நம்பிக்கையில் வளர்ந்த மகாத்மா காந்தி, தன்னம்பிக்கையில் வளர்ந்த ஹிட்லரும், இந்த நூற்றாண்டிலே பிரசித்தியடைந்த உதாரண மனிதர்கள். தெய்வ நம்பிக்கையுடன், தான் சரியான வழியில்தான் நடக்கிறோம் என்கிற நிச்சயத்துடன் வாழ்ந்தால் இவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவர். தெய்வம் போன்ற திடமாக என்றும் விளங்கக்கூடியதான தத்துவங் களில் ஏதேனும் ஒன்றில் பிடிப்பு ஏற்பட்டால்தான் இவர்க ளுக்கு தன்னம்பிக்கை உண்டாகும்.
சந்திரனுக்கு எப்படி சுயமாக பிரசாசம் கிடையாதோ அப்படியே இவர்களுக்குமிருக்கும் இயற்கையாகவே இவர்களுக்கும் தன்னைத்தவிர ஏதாவதொன்றில் நம்பிக்கை ஏற்படா விடில் புத்திப் பிரகாசம் ஏற்படாது. மேன்மையும் உண்டாகாது. பொதுவாக இவர்கள் நம்பிக்கையற்றவர்கள். தைரியமாகத் தன்னையும் நம்பமாட்டார்கள்; பிறரையும் நம்பமாட்டார்கள். சிறிய காரியத்தையும் பிறரை நம்பி ஒப்படைக்க இவர்களுக்கு மனம் வராது. எதையும் தானே செய்தால்தான் திருப்தி ஏற்படும். இவர்களுக்கு சாமர்த்தியமும் போதாது. ஆகையால் வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டு வாழ்க்கையை சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். (கதவைப் பல தடவைகள் நன்றாகப் பூட்டிவிட்டுக் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் வந்து பூட்டைஇழுத்துப் பார்க்கிறவர்கள் இவர்கள்தான்) இவர் இயற் கையில் பயங்கொள்ளி. இவர்களில் மிகுந்த மேன்மையானவர்கள் சாந்த சிலராக வாழ்வர். மற்றவர்களோ சண்டப் பிரசண்டமாகப் பேசுவார்கள். எதையும் மிகைப்படுத்தியே வெளியிடுவார்கள். சில சமயங்களில் எரிமலை கக்கும் நெருப்புக் குழம்பு போல் இருக்கும். யாராவது எதிர்த்தால் உடனே அடங்கிப் போவார்கள். பயமுறுத்துவதிலும், மிரட்டி.யே வாழ்க்கை நடத்துவதிலும் இவர்கள் சூரர்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள். என்னதான் தைரியமாக இவர்கள் பேசினாலும் நெஞ்சில் பயம் குடிகொண்டே இருக்கும். இவர்களில் சத்தியமே பேசுகிறவர்களையும் பொய்யே பேசுகிறவர்களையும் காணலாம்; இவர்களது புத்தி ஒரேமாதிரி இராது. சூழ்நிலையை அனுசரித்து மாறிய வண்ணமிருக்கும். கூடப் பழகுகிறவர்க ளுடைய நடையுடை பாவனைகள் இவர்களுக்கும் படிந்து விடும். (ஆகையால் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பெற்றோர். ஜாக்கிரதையாகக் கவனித்து வரவேண்டும். சிறிய வயதில் பொய் பேசுகிறவர்கள், சிரத்தையற்ற வாழ்க்கை நடத்துபவர்கள் ஆகியோருடன் பழகவிடக் கூடாது.
பிறருக்கு பிரமாதமான யோசனைகள் சொல்லுவார்கள், தான் ஒரு காரியத்தை செய்யும்படி நேர்ந்தால் திரும்பத் திரும்ப யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளுவார்கள். தன்னைக் கண்டு பயப்படாதவர்களிடம் மிகவும் நயமாகப் பழகுவார்கள். தன்னைக் கண்டு பயப்படுவர்களை சதா விரட்டிய வண்ணமே இருப்பார்கள். இவர்களுக்கு மன ஓட்டம்தான் வேகமே ஒழிய, கை கால் ஓட்டம் மிகவும் தாமதமாகவே காணும் எந்தக்காரியத்தையும் பல தடவைகள் யோசித்து மெதுவாகவே செய்வார்கள். இவர்களுக்கு சோம்பல் ஓரளவு உண்டு. எல்லா சாமர்த்தியங்களும் இருந்த போதிலும் ஒருவித உழைப்பிலும் ஈடுபட மனநாட்டம் இராது. எதற்கும் பலர் யோசனைகளையும் கேட்டுவிட்டு ஒன்றையும் செய்யாமலே இருந்துவிடுவார்கள். (நான் எப்படிச் செய்ய, பலரும்பலமாதிரி சொல்லுகிறார்களே என்பார்கள்). தர்க்கம் பண்ணுவதில் இவர்களுக்கு வெகு பிரீதி. ஒவ்வொரு சொல்லுக்கும் பலவிதமான அர்த்தங்களை அள்ளி வீசுவார்கள். தர்க்கமும் சரி, குதர்க்கமும் சரி, இவர்களைப்போல் யாராலும் செய்ய முடியாது.
வாழ்க்கையை மேலான குறிக்கோள் உடையதாகச்செய்துகொள்ள வேண்டும். வீண் பயம் நீக்கப்பட வேண்டும்.
சிறிய கஷ்டமே வந்தாலும் தற்கொலைக்கான எண்ணங்கள் இவர்களுக்கு உண்டாகும். நீரில் மூழ்கி வாழ்க்கையை முடித்துக் கொள்ளுபவர்கள் இவர்களே. இவர்களுக்கு வரும் சிரமங் கள் இவர்களது தெய்வநம்பிக்கையை வலுப்படுத்தவே வருகின்றன. நம்பிக்கையுடன் இருந்தால் சீக்கிரமே சிரமங்கள் நீங்கி விடும்.