எண் ஆறு

பிறந்த தேதிகள்  6, 15, 24

பொதுவான கூணங்கள்

தைரியசாலிகளாகவும், காந்த சக்தி நிறைந்த கண்கள் பொருத்தியவர்களுமான இவர்களை வெகு சுலபத்தில் பார்த்த மாத்திரத்தில் சுக்கிர ஆதிக்கரென அறியலாம். மனம் எப்போதும்  அழகான பொருட்களிலும்,கவிதை இசை, நடனம் முதலிய இன்பகரமான விஷயங்களிலும் ஈடுபட்டிருக்கும். ஐம்புலன்களாலும் அனுபவிக்க கூடிய பொருள்களையெல்லாம் நன்கு கவனிப்பர். சந்தோஷமாக வாழ்வதே இவர்களது வாழ்க்கையின் இலட்சியம். போகங்கள் மனதை இழுக்கும். வேதாந்திகள் உலகம் மாயை என்று சொல்வதைக் கேட்டால், இவர்களுக்கு வியப்பாக இருக்கும். இத்தனை சுகங்கள் நிறைந்த இடத்தையா இப் படிக் கூறுகின்றனர் என்று நினைப்பார்கள் ஆனால் இவர்கள் நாத்திகரல்ல  என்பதைக் கவனிக்கவும். அசுர குருவின் ஆதிக்கத்தின் கீழ்ப்பட்ட எண்ணாகையால் இதில் பிறந்தோர் மந்திர தந்திரங்களிலும் தவம் புரிவதிலும் கா்ரிய சித்திக்காக இறைவனை வழிபடுவதிலும் தீவிரமு டையவர்களாக இருப்பர். இவர்கள் தியாகம் புரிந்தாலும் நிச்சயமாக அது பெருத்த லாபத்தையடையச் செய்யும் செயல் எனக் கூறிவிடலாம். யோசித்து முடிவுக்கு வராமல் எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள். தோல்வியால் சோர்வடைய மாட்டார்கள். அசுரத் தன்மையுடன் மேன் மேலும் தீவிரமாக முயற்சிப்பார்கள் உலக வாழ்க்கை நிச்சயம், அதில் தான் நல்ல பதவியடைய வேண்டியது மிகவும் முக்கியம், என்று நினைப்பது போலத் தோன்றும் இவர்களது வாழ்க்கை. வசீகரமான தோற்றமும் விடா முயற்சியும் தன் காரியத்திலேயே கண்ணாயிருக்கும் தன்மையும் உடைய இவர்கள் செல்வமும் செல்வாக்கும் பொருந்தி யவர்களாக வாழ்வதில் வியப்பொன்றுமில்லை. துளிக்கூட சந்தேகமில்லாமல் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று  குறிப்பிடலாம்.

காவியம், ஓவியம், சங்கீதம், நடனம் முதலியவைக ளில் மனதைப் பறிகொடுக்கக்கூடிய இவர்களே இன்று வரை பண்டைக்கால நாகரீக சின்னங்களையும் கலைகளையும் பாதுகாத்து நமக்கு அளிப்பவர்கள். உல்லாசமான சுற்றுப்புறங்களையும் காட்சிகளையும் விரும்புவதால் தோட்டம், வீடு இவைகளில் கவனம் செலுத்துவர். ஏவலாட்கள் இல்லாத வாழ்க்கை இவர்களுக்கு சப்பென்றாகி விடும். நேத்திரானத்தமான காட்சிகளை சதா கண்டுகளிக்க விரும்புவதால் வீட்டையே அழகுப் பொருள்களால் நிறைக்க விரும் புவர். இந்த ஆதிக்கரில் ஆண் மக்களும் நகைகள் அணி வதை மிகவும் விரும்புவர். தாங்கள் விரும்புபவர்களிடம் அன்பு, இரக்கம், தயைஉடையவர்களாக இருப்பர். நண்பர்களல்லாதவரிடத்து மிக்க நிதானமாக நடந்து கொள்வர். எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பர். மிக்க மனப்பான்மையுடையவராகவே தோன்றுவர். ஆனால் தனக்கு சந்தோஷ மூட்டியவர்களுக்கும் கொடுப்பதற்கு மனம் வராது. இவர்களது இன்சொற்களையும் நடிப்பையும் கண்டு ஏமாந்த கலைஞர்கள் தொகை எண்ணிலடங்காது. புகழுக்கு ஆசைப்பட்டு ஓரளவு செலவு செய்வார்கள். தன் புகழுக்காகவே கலைஞர்களை ஆதரிக்க முன் வருவர். இந்த எண்ணின் கீழ் பிரசித்தமான கலைஞர்கள் பிறக்கின்றனர். இன்னும் உலகில் உள்ள பிரசித்த கலைஞர்கள் வித்வான்கள் இந்த ஆதிக்கரே. பொதுஜன ஆதரவு இவர்களுக்கு அதிகமாக இருப்பதற்கு இவர்களது வசீகரத் தோற்றமே முக்கியமான காரணம். கலையார்வமுடையவர்கள் பலர் இவர்களுக்கு உதவியவண்ணம் இருப்பர். பிரியமுடையவர்கள் போல இவர்கள் பழகின போதிலும்  செய்நன்றியை மறப்பதில் சமர்த்தர். இவர்கள் இக் குணத்தை சீர்திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். சமூகத்தை சந்தோஷப்படுத்தப் பிறந்த இவர்களைப் பற்றி அதிகம் குறைகூறிப்பயனில்லை. இது சுக்கிர ஆதிக்கத்தின் இய்ல்பு என்று அறிந்து விட்டுவிடுவோம். இவர்களுக்கு ஒருநாளும் வாழ்க் கைத் தேவைகளான ஊண், உடை, உறக்கம் ஆகிய மூன்று “உ” கரங்களிலும் குறைவு வராது. யாராவது உதவி தன்னுடைய ஆரோக்கியத்தில் கவலை கொண்டவர்களாக சத்து  பொருள்களை உட்கொண்ட வண்ணமிருப்பார்கள். படிப்பதிலும், பார்ப்பதிலும், கேட்பதிலும் திருப்தியடையாமல் எல்லா சுகங்களையும் அனுபவிப்பதில் ஆர்வமுடைய இவர்கள் ஜீவ சக்தியை அதிகம் விரயம் செய்வர் விசேஷ புத்தர பாக்கியமுடையவர்கள். (2 எண்ணிக்கைக்காரர் களும் 6 எண்ணிக்கைக்காரர்களுமே, மற்றைய ஏழு வித மானவர்களைவிட அதிகம் புத்ர பாக்கியமுடையவர்களாகக்காணப்படுகின்றனர்), இவர்களைச் சுக்ர ஆதிக்கத்தை ஒட்டி மூன்று விதமான பிரிவுகளில் பிரிக்கலாம்,

‘தோஷமின்றி 6-இன் ஆதிக்கம் இருந்தால் சரீரம் ஜீவ சக்தி அதிகமானதாக  இருக்கும். அன்பு, சாந்தம் இவைகளின் ஒருப்பிடமாக வாழ்வர். எப்பொழுதும் எந்நிலையிலும் சமாதானத்தை விரும்புவர். வீடு, சமுகம், உலகம் எல்லாம்  சமாதானம் நிறைந்திருக்க வேண்டுமென சதா நினைத்து அதற்காகப் பாடுபடுவார்கள். பரோபகார சிந்தை மிகும். பிறர் கஷ்டத்தை தீர்க்க வழிகாட்டுவார்கள். ஆதிக் கம் சுத்தமாக இருந்தால் ஏசு கிறிஸ்துவைப் போன்ற மனம் அமையும். சரீரம் போர் வீரரது போன்று இருக்கும்.

அடுத்தபடியாக சுக்ர ஆதிக்கம் பலக் குறைவாக இருந் தால் சரீரம் பருத்துக் காணப்படும். சுகபோக வாழ்க்கை அமையும். மேலான லக்ஷியங்கள் இருக்காது. உண்பதும், றங்குவதும் உல்லாசமாக வாழ்வதுமே வாழ்க்கையாகிவிடும். விருந்துகளும், கேளிக்கைகளும், புகழ் நாட்டமுமே சதா புரியும் காரியங்களாகிவிடும். செல்வம் சேர்ப்பதில் ஓய்வில்லா  முயற்சியும், அதற்குத் தகுந்த அதிர்ஷ்டமுமுண்டு: ஒருவிதக் குறைவுமின்றி திருப்தியான வாழ்க்கையமையும். இந்த எண்காரர்களை லக்ஷ்மி புத்திரர்கள் என்று கூறின் மிகையாகாது. ஆண்களானால் நல்ல அந்தஸ்திலுள்ள மனைவியை அடைவர். மனைவியால் சௌக்கியங்களை அடைவர். பெண்களானால் நல்ல அந்தஸ்திலுள்ள புருஷர்களையே அடைந்து அதன் மூலம் சௌக்கியமடைவர். இந்த எண்னின் ஆதிக்கத்தில் பிறக்கும் பெண்கள் போக போக்கியங் களை  அடைய வேண்டியவர்களாதலால், இவர்களை நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களுக்கே மணம் முடித்தல்  நலம். இல்லாவிடில் தவறான வழிகளில் இவர்கள் அதிர்ஷ்டம் திரும்பி விடுகிறது.  பொதுவாக இந்த எண்காரர்கள் தன்னைவிட மேலான அந்தஸ்திலுள்ள வர்களால் காதலிக்கப் படுகின்றனர் என்பது நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம். அந்தஸ்து, செல்வம் இவை களை அடைய அழகை உபயோகப்படுத்திக் கொள்ளுதல் நம் நாட்டுப் பண்புக்கு ஒத்ததல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

சுக்ர தோஷம் உடையவர்களை இப்பொழுது கவனிப்போம். இவர்களே வாக்கு சாதுர்யத்தையும் வசீகர சக்தியையும் துஷ்பிரயோகம் செய்கிற சமூக எதிரிகள். இப்படிப் பட்டவர்களே தான் வாழும் சமூகத்தையும் ஏன் தேசத் தையுமே துக்கத்தில் ஆழ்த்தக் கூடியவர்கள். பிரசங்க சக்தி இருக்கும். எவரையும் வசப்படுத்தி விடுவார்கள். இவரிடம் ஏமாறுகிறோம் என்று தெரிந்தே மற்றவர்கள் ஏமாறுவார்கள், சுக்ர ஆதிக்கம் கெட்ட வழியில் திரும்பியவர்களை எப்படி அறிவதென நேயர்கள் சிறிது சிந்திக்கலாம். கீழ்க் கண்ட குணங்களால் அறியவும். பேராசை, சூது, வஞ்சகம், பெருத்த மோசடியான திட்டங்கள், சினேகிதர்களிடத்தும் விசுவாசமில்லாதிருத்தல், அதிக காமம், தீவிர பண நாட்டம் முதலியன மனதில் குடிகொண்டிருக்கும்.நண்பர்கள் பலர் இந்நூல் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய உரைகல் போல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால்தான் இவ்வளவு விரிவாகத் தெரி விக்கவேண்டி இருக்கிறது.

×
×

Cart