நிலாச்சோறு!

சந்திரன், உணவிற்கு அதிபதியானவர். சந்திரன் ஒரு
ஜாதகத்தில் வலுத்திருந்தால், அவருக்கு உணவுக்குப் பஞ்சம்
இருக்காது! ருசியான உணவை விரும்பி உண்ணக்கூடியவர்!
பௌர்ணமி இரவு அன்று எல்லோரும் சேர்ந்து வீட்டு முற்றத்தில்,
மாடியில் நிலாவைப் பார்த்துக்கொண்டே ‘நிலாச்சோறு’
சாப்பிடுவார்கள். பௌர்ணமியன்று சந்திரனின் முழு ஆதிக்கம்
உள்ள நாள். அதனால்தான் எல்லோரும் உணவு அருந்துவதை
அவர் பார்வைபடும்படி ஆயிற்று! ஒரு குழந்தைக்கு உணவு
ஊட்டும் தாய்கூட நிலவைக்காட்டி உணவு ஊட்டும்
அதிசயத்தைப் பாருங்களேன்!

×
×

Cart